விஜய்யின் ‘பகவதி’ படத்தில் ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் இவர் தான்… உண்மை தெரிந்தா ஆச்சரியப்படுவீங்க!
2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளான படம் Bhagavathi. Vijay நாயகனாக நடித்த இந்த படத்தில், Reema Sen, Vadivelu, Ashish Vidyarthi உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளான படம் Bhagavathi. Vijay நாயகனாக நடித்த இந்த படத்தில், Reema Sen, Vadivelu, Ashish Vidyarthi உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையை Deva அமைத்திருந்தார். பின்னர் இந்த படம் 2005 ஆம் ஆண்டு கன்னடத்தில் Kashi From Village என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதையை விட, விஜய் – வடிவேலு கூட்டணி காமெடி காட்சிகளே இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அந்த வகையில், ‘பகவதி’ ஒரு மாஸ் எண்டர்டெய்னராகவே நினைவில் நிற்கிறது.
இந்த படத்தை இயக்கிய A. Venkatesh சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். ‘பகவதி’ கதையை விஜய்யை மனதில் வைத்து உருவாக்கிய போது, அவரின் தம்பி கதாபாத்திரமான “ஜெய்” ரோலில் Dhanush-ஐ நடிக்க வைக்கலாம் என்று முதலில் யோசித்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தனுஷிடம் கேட்டபோது, அந்த கதாபாத்திரம் தனக்கு சரியாக அமையாது என்று அவர் மறுத்ததாகவும், விஜய்யுடன் நடித்தால் படம் B மற்றும் C சென்டர்களில் நல்ல ரீச் அடையும் என கூறியபோது, “காதல் கொண்டேன் ரிலீஸ் ஆனதும் நானே அந்த சென்டர்களுக்கு போய்விடுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்ததாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அந்த இளம் வயதிலேயே ஹீரோவாக மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தெளிவு தனுஷிடம் இருந்ததையும், அதனால் தான் அவர் அந்த கதாபாத்திரத்தை மறுத்ததாகவும் ஏ. வெங்கடேஷ் நினைவுகூர்ந்துள்ளார்.
Editorial Staff