20 வயதில் சந்தித்த பாலியல் தொல்லை – நடிகை தமன்னாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்

நடிகைகள் எதிர்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து Me Too இயக்கம் காலகட்டத்தில் பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்த நிலையில், தற்போது தமன்னா தனக்கு நேர்ந்த ஒரு சங்கடமான சம்பவத்தை மனதிறந்து பேசியுள்ளார்.

20 வயதில் சந்தித்த பாலியல் தொல்லை  – நடிகை தமன்னாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் சந்தித்த ஒரு கடினமான அனுபவத்தை முதன்முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் எதிர்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து Me Too இயக்கம் காலகட்டத்தில் பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்த நிலையில், தற்போது தமன்னா தனக்கு நேர்ந்த ஒரு சங்கடமான சம்பவத்தை மனதிறந்து பேசியுள்ளார்.

தமன்னாவுக்கு 20 வயது இருக்கும் போது, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மிகவும் நெருக்கமான காட்சியில் நடிக்க அந்தப் படத்தின் இயக்குனர் அவரை வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தக் காட்சி தனக்கு அசௌகரியமாக இருப்பதாகவும், அதில் நடிக்க உடன்பாடு இல்லை என்றும் அவர் நேரடியாக இயக்குனரிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த இயக்குனர், படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரின் முன்னிலையிலும், தமன்னாவை மாற்றி வேறு நடிகையை தேர்வு செய்யுமாறு கடுமையாக பேசினார் என கூறப்படுகிறது. மேலும், வேலையை விட்டு நீக்குவேன் என்ற மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

எந்த அழுத்தமும் வந்தாலும் தவறான விஷயத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்ற உறுதியுடன் தமன்னா தனது முடிவில் நிலைத்திருந்துள்ளார். அவரது தைரியத்தையும் உறுதியையும் உணர்ந்த அந்த இயக்குனர், இறுதியில் தனது தவறை ஏற்று தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.