பார்வதி தீய சக்தியா.. பிக்பாஸ் ரெட் கார்டு விவகாரத்தில் பார்வதி மீது சர்ச்சை!
இந்த ரெட் கார்டு முடிவை பல ரசிகர்கள் ஆதரிக்கின்றனர்; சிலர் கொண்டாடுவது வரை சென்றுள்ளது. கேக் வெட்டி கொண்டாடுவது, ஆட்டம் பாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன.
இன்றைய இணைய உலகின் முக்கிய பேசுபொருட்களில் ஜன நாயகன், பராசக்தி, மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமருதீன் மற்றும் விஜே பார்வதி ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய சம்பவம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, பிக்பாஸ் சம்பந்தப்பட்ட செய்திகளும் விவாதங்களும் தற்போது அதிக அளவில் பரவி வருகின்றன.
இந்த ரெட் கார்டு முடிவை பல ரசிகர்கள் ஆதரிக்கின்றனர்; சிலர் கொண்டாடுவது வரை சென்றுள்ளது. கேக் வெட்டி கொண்டாடுவது, ஆட்டம் பாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. இந்தச் சூழலில், பார்வதியை மையமாக வைத்து பல்வேறு மீம் வீடியோக்கள் உருவாகி வருகின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது, பார்வதியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று “துணிவே சக்தி” என்று பார்வதிக்கு ஆறுதல் கூறிய காட்சியையும், நடிகர் விஜய் தனது கட்சியின் பொதுக்கூட்டத்தில் “தீய சக்தி” என்று பேசிய வார்த்தையையும் இணைத்து உருவாக்கப்பட்ட மீம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும், அரோரா டிக்கெட் டூ ஃபினாலேவை வென்ற நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு அதற்கான டிக்கெட்டை வழங்கும் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. இதையொட்டி, “படையப்பா” படத்தில் நீலாம்பரி படையப்பாவின் திருமண வீடியோவை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல, பார்வதி இந்த ப்ரோமோவைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து, அந்தக் காட்சியுடன் பார்வதியின் அம்மா கூறிய “துணிவே சக்தி” மற்றும் விஜய் பேசிய “தீய சக்தி” என்ற வார்த்தைகளை இணைத்து உருவாக்கப்பட்ட மீம் வீடியோவும் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், “அடப்பாவிங்களா... நீலாம்பரி வரைக்கும் போயிட்டீங்களே!” என்று வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Editorial Staff