மக்கள் மீதான ஒடுக்குமுறை: ஈரானுக்கு எதிராக ஆஸ்திரேலியா புதிய நிதித் தடைகளை அறிவித்தது!
ஈரானுக்கு எதிராக ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தி வரும் ஆஸ்திரேலியா, தற்போது அந்த நாட்டின் மீது கூடுதல் நிதித் தடைகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரான் அரசாங்கம் தனது மக்கள்மீது ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஆஸ்திரேலியா, அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையைச் சேர்ந்த 20 அதிகாரிகள் மற்றும் 3 நிறுவனங்களுக்கு நிதி தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் மற்றும் இணைய சேவைகள் முடக்கம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை ஆஸ்திரேலியா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதுடன், அதன் காரணமாக பல உயர் இராணுவ அதிகாரிகளுக்கு முன்பே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
