2026-இல் தங்கம் விலை 82% உயர்ந்தால் ஒரு கிராம் விலை எவ்வளவு? ஷாக் ஆகாதீங்க!
2026 ஆம் ஆண்டும் 2025 போலவே 82% விலை உயர்வு ஏற்பட்டால், தற்போதைய ₹13,000 அடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹23,637 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு சவரன் விலை ₹1,89,000 ஆக உயரலாம்.
2025 ஆம் ஆண்டு இந்தியாவில் தங்கத்தின் விலை பலரும் எதிர்பாராத அளவில் உயர்ந்து, சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹7,150 ஆக இருந்தது. அதன் பிறகு ஏப்ரலில் ₹9,000, செப்டம்பரில் ₹10,000, அக்டோபரில் ₹11,000 என படிப்படியாக உயர்ந்து, இன்றுவரை ₹13,000 ஐத் தொட்டுள்ளது. இது ஜனவரி 1-ஆம் தேதியை விட 81.82% உயர்வைக் குறிக்கிறது.
சவரன் விலையும் இதே வீதத்தில் உயர்ந்துள்ளது. ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு சவரன் ₹57,200 ஆக விற்பனையானது, இன்று அது ₹1,04,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, பல்வேறு உலகளாவிய காரணிகளால் இடம்பெற்றுள்ளது – அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான வர்த்தக மோதல்கள், டாலரின் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகளின் தங்க சேகரிப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டும் 2025 போலவே 82% விலை உயர்வு ஏற்பட்டால், தற்போதைய ₹13,000 அடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹23,637 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு சவரன் விலை ₹1,89,000 ஆக உயரலாம்.
எனினும், பல நிறுவனங்களும் ஆய்வாளர்களும், 2026-இல் இவ்வளவு அதிக உயர்வு நிகழ வாய்ப்பு குறைவு என்றும், 20% முதல் 40% வரையான உயர்வே எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் கணிப்புகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் கருத்துகள் மட்டுமே. இது முதலீட்டு ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு முதலீட்டு முடிவும் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களின் உதவியுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
Editorial Staff