கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் வேளையில் சாக்லெட் விலை உயர்ந்தது!
Ferrero, Mars, Nestlé போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது சாக்லேட் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், சாக்லேட்டின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக பயன்படும் கொக்கோவின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், 2025ஆம் ஆண்டில்தான் அந்த விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
2021 முதல் 2024 வரை கொக்கோவுக்கான உலகளாவிய தேவை அதிகமாக இருந்தாலும், அறுவடை அளவு அதனை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக கொக்கோவின் விலை கடுமையாக உயர்ந்தது.
2024ஆம் ஆண்டு இறுதியில் ஒரு டன் கொக்கோவின் விலை 12,000 டாலரை எட்டியது. தற்போது அது சுமார் 6,000 டாலராக குறைந்திருந்தாலும், சாக்லேட் விலையில் அதற்கான பிரதிபலிப்பு இன்னும் காணப்படவில்லை.
பண்டிகைக் கால தேவையை முன்னிட்டு, நிறுவனங்கள் ஏற்கெனவே அதிக செலவில் சாக்லேட்டுகளை தயாரித்து விட்டதால், விலையை உடனடியாகக் குறைப்பது சிரமமாக உள்ளது. இந்தச் செலவுச்சுமையை சமாளிக்க, சில நிறுவனங்கள் தங்களது பொருட்களில் சாக்லெட்டின் அளவைக் குறைத்துள்ளன.
Ferrero, Mars, Nestlé போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது சாக்லேட் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக, அந்தப் பொருட்களுக்கான மக்களின் தேவை ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Editorial Staff