ஆண்களே கவனம்! உங்கள் விந்தணு ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் எச்சரிக்கை அறிகுறிகள்!

ஒவ்வொரு ஆணும் தன் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.

ஆண்களே கவனம்! உங்கள் விந்தணு ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் எச்சரிக்கை அறிகுறிகள்!

நாம் அன்றாட வாழ்க்கையில் வேலை, குடும்பப் பொறுப்புகள், பொருளாதார தேவை போன்றவற்றுக்கே முதன்மை கொடுக்கிறோம். இதன் இடையில் நமது உடல் ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. உடலில் ஏதாவது பெரிய பிரச்சனை ஏற்பட்ட பிறகே, ஆரோக்கியம் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறோம். ஆனால் உண்மையில், தினசரி பழக்கங்களின் காரணமாக உடல் ஆரோக்கியம் மெதுவாக சிதைவடைகிறது என்பதையே நாம் உணர்வதில்லை.

இன்றைய வாழ்க்கை முறையில் பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள், உடலுழைப்பில்லாத தினசரி பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வேலை சூழல், போதிய தூக்கமின்மை, மது மற்றும் சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கின்றன. இதன் தாக்கம் குறிப்பாக ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் அதிகமாக காணப்படுகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக தவறான வாழ்க்கை முறை மற்றும் பழக்கங்கள் கருதப்படுகின்றன. இதன் விளைவாக, இன்றைய காலத்தில் திருமணமான பல தம்பதிகள் குழந்தை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

ஒருபுறம் பெண்கள் பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மறுபுறம் ஆண்கள் ஆரோக்கியமற்ற விந்தணு தொடர்பான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 

ஒரு ஆணின் விந்தணு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால், உடலில் சில மாற்றங்களும் எச்சரிக்கை அறிகுறிகளும் வெளிப்படலாம். அவற்றை ஆரம்பத்திலேயே உணர்ந்து, சரியான வாழ்க்கை முறை மாற்றங்களும் மருத்துவ ஆலோசனையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

எனவே, ஒவ்வொரு ஆணும் தன் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.

1. விந்து நிற மாற்றம்

விந்தணுவின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், மஞ்சள் காமாலை இருக்க வாய்ப்புள்ளது அல்லது அதிகப்படியான சல்பர் நிறைந்த உணவுகள் அல்லது அதிக மது அருந்தியிருக்க வாய்ப்புள்ளது. அதுவே விந்து பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்தால், ஏதோ பாக்டீரியல் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். மேலும்

2. இரத்தம் கலந்த விந்து

விந்துவில் இரத்தம் கலந்து வெளியேறுவதைக் கண்டால், பாக்டீரியா அல்லது க்ளமீடியா போன்றவற்றால் பாலியல் நோய் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இது புரோஸ்டேட் சுரப்பி தொற்று அல்லது சிறுநீர்க்குழாயில் ஏற்படும் காயத்தையும் சுட்டிக் காட்டலாம். எனவே கவனமாக இருங்கள்.

3. வீங்கிய விதைப்பை அல்லது வலி

ஆண்கள் தங்களின் விதைப்பையில் வழக்கத்திற்கு மாறாக வீக்கத்தைக் கண்டாலோ அல்லது வலியை சந்தித்தாலோ, அதை சாதாரணமாக விடக்கூடாது. அது புரோஸ்டேடிடிஸ், எபிடிடிமிடிஸ், ஆர்க்கிடிஸ் அல்லது ஹைட்ரோசீல் இருப்பதைக் குறிக்கலாம். எனவே இந்த அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

4. குறைவான அளவில் விந்து வெளியேறுவது

விந்து மிகவும் குறைவான அளவில் வெளியேறினாலோ அல்லது விந்து வெளிவராமல் இருந்தாலோ, விந்து வெளிவரும் குழாயில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், பின் அது நீண்டகால கருவுறுதல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இயற்கையான கருத்தரிப்பை மிகவும் கடினமாக்கும்.

5. நீர் போன்ற விந்து

விந்து மிகவும் நீர் போன்று இருந்தால், விந்துவில் உள்ள விந்தணுக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே உங்களின் விந்து நீர் போன்று வெளியேறுவதைக் கண்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.