சிட்னி தாக்குதல் எதிரொலி: லண்டனில் யூதர்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடமேற்கு லண்டனில் நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் கூடிய ஹனுக்கா கொண்டாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளிலும் பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

சிட்னி தாக்குதல் எதிரொலி: லண்டனில் யூதர்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி – போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் பின்னணியில், லண்டனில் யூதர்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

யூத சமூக நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வுகளின் போதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய லண்டனில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக சுமார் 100 பேர் திரண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த நிகழ்வின் போது இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய கொடிகள் அசைக்கப்பட்டதுடன், சிலர் “வெறுப்பை நிறுத்துங்கள்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலகைகளை ஏந்தியிருந்தனர்.

அதே நேரத்தில், வடமேற்கு லண்டனில் நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் கூடிய ஹனுக்கா கொண்டாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளிலும் பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

சிட்னி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவரான ரப்பி எலி ஷ்லாங்கர் பள்ளியில் கல்வி கற்ற சானி சைமன், 41 வயதான அவரை “தன் வாழ்வின் உச்சத்தில் இருந்த ஒரு தந்தை” என நினைவுகூர்ந்தார். லண்டனில் பிறந்த ரப்பி எலி, ஐந்து குழந்தைகளின் தந்தை ஆவார். அவரது உறவினர் ரப்பி சல்மான் லூயிஸ், ரப்பி எலியை மக்களை நேசிக்கும், அக்கறையுடன் பழகும், உற்சாகமும் ஆற்றலும் நிறைந்த வெளிப்படையான மனிதராக விவரித்தார்.