தாமதமாக வந்ததை கேட்ட ஆசிரியரை அறைந்த மாணவன் – குஜராத்தில் பரபரப்பு

தேர்வறையில் இருந்த ஆசிரியர் தாமதத்திற்கான காரணத்தை கேட்டபோது, மாணவன் மரியாதையற்ற முறையில் பதிலளித்ததோடு, ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.


தாமதமாக வந்ததை கேட்ட ஆசிரியரை அறைந்த மாணவன் – குஜராத்தில் பரபரப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவன், காரணம் கேட்ட ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஜனவரி 24 ஆம் தேதி ஷெஹ்ரா நகரில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமது கான் (18) என்ற மாணவன் தேர்வுக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. தேர்வறையில் இருந்த ஆசிரியர் தாமதத்திற்கான காரணத்தை கேட்டபோது, மாணவன் மரியாதையற்ற முறையில் பதிலளித்ததோடு, ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்துக்குப் பிறகு, மாணவனின் தந்தை ஆசிரியரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதன்பின்னர் மாணவன் தனது தந்தையுடன் மேலும் 15 முதல் 20 பேரை அழைத்து வந்து, தனியாக வசித்து வந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 3 ஆம் தேதி ஷெஹ்ரா போலீஸ் நிலையத்தில் மாணவர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளியின் சிசிடிவி காட்சிகளில் அடையாளம் காணப்பட்ட நான்கு பேரும், மேலும் 15 முதல் 20 பேரும் இதில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த 6 ஆம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க