நேர்மைக்கு பாராட்டு – துப்புரவு ஊழியருக்கு தங்கச் சங்கிலி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்

பத்மாவின் இந்த நேர்மையான செயல் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கினார்.
நேர்மைக்கு பாராட்டு – துப்புரவு ஊழியருக்கு தங்கச் சங்கிலி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் பணியாற்றும் துப்புரவு ஊழியர் பத்மாவின் நேர்மையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் அவரை தனது இல்லத்தில் சந்தித்து தங்கச் சங்கிலி வழங்கி கௌரவித்துள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

சென்னையின் டி.நகர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, பணியில் இருந்தபோது 45 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை கண்டெடுத்தார். அதனை உடனடியாக தனது மேலாளருக்கு தகவல் அளித்து, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தார். விசாரணைக்குப் பிறகு அந்த நகைகள் உரியவரிடம் பாதுகாப்பாக மீள வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்மாவின் இந்த நேர்மையான செயல் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கினார். மேலும், அவரது நற்குணத்தை பாராட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி வாழ்த்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர