விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: 250 கோடி செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை என தகவல்

Published on: 19 Apr 2026, 06:57 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

நடிகரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான உறவு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: 250 கோடி செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை என தகவல்

நடிகரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான உறவு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இருவரும் பரஸ்பரம் பிரிவது குறித்து, இருதரப்பு வழக்கறிஞர்கள் சென்னையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சங்கீதா தரப்பில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கான முடிவை விஜய் தரப்பு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிதி தொடர்பான விவாதங்கள் முக்கியமாக இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் சொத்து விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்கீதா தரப்பில் தனக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து சுமார் 250 கோடி ரூபாய் வரை செட்டில்மெண்ட் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மனைவிக்கு மட்டும் 35 கோடி ரூபாய் வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும், குழந்தைகளைத் தானே கவனிப்பதாக உறுதியளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த பேச்சுவார்த்தை மும்பையிலிருந்து வந்த இருதரப்பிற்கும் நெருக்கமான ஜோசியர் ஒருவரின் முன்னிலையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்து மனு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரைப்பட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW