மத்திய மந்திரியுடன் காதலா? கங்கனா ரனாவத் கொடுத்த விளக்கம்

கங்கனா ரனாவத் மற்றும் சிராக் பாஸ்வான் இடையே காதல் என்ற வதந்திகளை நடிகை மறுத்துள்ளார். அவர்கள் நீண்டநாள் நண்பர்கள் மட்டுமே என விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மந்திரியுடன் காதலா? கங்கனா ரனாவத் கொடுத்த விளக்கம்

பாலிவுட் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சிராக் பாஸ்வான் உடன் தன்னை இணைத்து பரவி வந்த காதல் வதந்திகளைத் தெளிவாக மறுத்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இவர்களுக்கிடையில் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கமளித்த கங்கனா, “சிராக் என் நல்ல நண்பர். எங்கள் நட்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இருவரும் Miley Naa Miley Hum என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தோம். அதிலிருந்து இன்று வரை நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்” என கூறினார்.

மேலும், “எங்களுக்குள் காதல் இருந்திருந்தால் அது இதற்குள் வெளிப்பட்டிருக்கும். ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பழகுகிறோம். ஆனால் நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பரவி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர