அந்த இடத்தில் ஆண்கள் கைவைத்தால் அனுபவிக்கனும் - சர்ச்சையை ஏற்படுத்திய ரேகா நாயரின் பேச்சு!
தமிழ் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துவரும் ரேகா நாயர் சமீபத்தில் அளித்த பேட்டி கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்பே பல்வேறு சமூக மற்றும் தனிப்பட்ட விவகாரங்களில் திறந்த மனதுடன் பேசியதற்காக கவனம் பெற்றிருந்த அவர், இம்முறை பெண்கள் ஆடை மற்றும் நடத்தை குறித்து கூறிய கருத்துகள் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.
தனது பேட்டியில், தற்போதைய பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடை அணிவதையும், அதற்கு சமூகத்தின் எதிர்வினையையும் பற்றிய கருத்துக்களை பகிர்ந்தார். அதில், சில சூழ்நிலைகளில் பெண்கள் தங்களைப் பற்றிய அணுகுமுறையில் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார்.
அத்துடன், தற்போதுள்ள சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன். உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அப்போ எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கவேண்டும். உதாரணமாக, அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஆராயாக்கூடாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்த நிலையில், அவர் பயன்படுத்திய சொற்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உடல் மீது அனுமதி இல்லாமல் நடப்பது தொடர்பான கருத்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
இந்தக் கருத்துகள் வெளியானதும், பலரும் “சம்மதம் (consent) என்பது எந்த சூழலிலும் அவசியம்” என்ற வாதத்துடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு, மரியாதை மற்றும் உரிமைகள் குறித்து சமூகத்தில் தொடர்ந்து பேசப்படும் நிலையில், இப்படியான கருத்துக்கள் தவறான புரிதலை உருவாக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிலர், பொதுமக்கள் முன்னிலையில் இருக்கும் பிரபலங்கள் சமூகப் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், ரேகா நாயரின் ரசிகர்கள் மற்றும் சில ஆதரவாளர்கள், அவர் கூறியதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், முழு பேட்டியின் சூழலில் பார்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.