பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள கனேடியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்கு பயணிக்கும் கனேடியர்கள், பயண அனுமதி இல்லாமல் இனி பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது.


பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள கனேடியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்கு பயணிக்கும் கனேடியர்கள், பயண அனுமதி இல்லாமல் இனி பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது.

பிரித்தானியாவுக்குப் பயணிக்கும் கனேடியர்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், Electronic Travel Authorization (ETA) என்னும் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்கவேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த ETA என்னும் பயண அனுமதி பெறுவதற்கான கட்டணம் 30 கனேடிய டொலர்கள் ஆகும்.

இந்த பயண அனுமதியை, U.K. eTA app என்னும் ஆப் அல்லது ஒன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். 

இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த விதி இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடியர்களுக்கு பொருந்தாது. அதாவது, கனேடிய, பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு வேறு விதி உள்ளது.

அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய, பிரித்தானிய பாஸ்போர்ட் அல்லது certificate of entitlement என்னும் ஆவணத்தை வைத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க