உங்களை செல்வந்தராக மாற்றும் சப்பாத்தி... எப்படி தெரியுமா?
கோதுமை இந்தியாவின் பல மாநிலங்களில் உணவின் முக்கிய பகுதியாக உள்ளது, ஆனால் ஜோதிடத்தில் அமைதிக்கும், செல்வத்தை அதிகரிக்கும் சக்திவாய்ந்த உணவாகவும் கருதப்படுகிறது.
கோதுமை இந்தியாவின் பல மாநிலங்களில் உணவின் முக்கிய பகுதியாக உள்ளது, ஆனால் ஜோதிடத்தில் அமைதிக்கும், செல்வத்தை அதிகரிக்கும் சக்திவாய்ந்த உணவாகவும் கருதப்படுகிறது.
புராணங்கள் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களில், கோதுமை என்பது சூரியன் அம்சம் கொண்ட உணவுப் பொருளாகவும், கோதுமை உணவான சப்பாத்தி அல்லது ரொட்டியை சனி, ராகு-கேது உடனும், கோதுமை உணவுடன் பால் அல்லது கோதுமை இனிப்புகளை சூரியன் மற்றும் சுக்ரன், மகாலட்சுமியுடன் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளது.
சரியான முறையில் ரொட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் கிரகங்களின் எதிர்மறை தாக்கங்கள் குறைத்து, நேர்மறை சக்தியை அதிகரிக்கலாம். வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதாரத் தடைகள் விலகி, வாழ்க்கை மேம்படும். சப்பாத்தி அல்லது ரொட்டியை என்ன செய்ய வேண்டும்?
வாழ்வில் அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் இருக்கும். பெருஞ்செல்வம் இல்லையென்றால் கூட சௌகரியமாக, எல்லா வசதிகளோடும் பணவரவு குறையாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். ஒரு சிலர் இதற்காக கடினமாக உழைப்பார்கள்; இருப்பினும் கால நேரம் கூடி வராமல் இருக்கும் பொழுது, கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம்.
அந்த வகையில், ஜோதிட ரீதியாக சின்ன சின்ன விஷயங்களை அதாவது பரிகாரங்களை செய்வதன் மூலமாக வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகள் கர்மவினைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களை நிவர்த்தி செய்ய முடியும்.
அரிசிக்கு பதிலாக கோதுமையில் செய்யும் சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும், அரிசி சோறு அளவுக்கு சப்பாத்தி சாப்பிட மாட்டோம் என்பதால் குறைந்தபட்ச அளவிலாவது கலோரிகள் குறையும். சப்பாத்தி இருந்தால் செல்வந்தர் ஆகலாம், ஆனால் அதை நீங்கள் சாப்பிடக்கூடாது.
ஜோதிடர்களின் குறிப்புப்படி சப்பாத்தியை இந்த மாதிரி பயன்படுத்தினால் வாழ்க்கையில் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் விலகி, செல்வந்தராகும் வாய்ப்புகளையும் வழிகளையும் பெறுவீர்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதாரத் தடைகள் விலகி, வாழ்க்கை மேம்படும். சப்பாத்தி அல்லது ரொட்டியை என்ன செய்ய வேண்டும்?
வெள்ளிக்கிழமை பசுவுக்கு ரொட்டி அளிக்கவும்
கால்நடைகளுக்கு உணவளிப்பது என்பது கர்ம வினைகள் விலகும் ஒரு எளிமையான வழியாகும். தினமும் மாடுகளுக்கு அல்லது பசுவுக்கு ரொட்டி அளிக்க முடியும் என்றால் செய்யலாம், ஆனால் வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகும். மகாலக்ஷ்மியின் அம்சம் கொண்ட வெள்ளி அன்று, பசுவுக்கு ரொட்டியுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து வழங்குவது, நிதி நிலைத்தன்மையை உருவாக்குகிறது, வருமானத்தை பெருக்கி, செல்வச் செழிப்பை உண்டாக்குகிறது.
சனிக்கிழமையில் நாய்க்கு ரொட்டி
கேது வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், பற்றற்ற நிலை, விரக்தி , வெறுமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியுடன் தொடர்புடையது. சனி, கர்மா மற்றும் உழைப்பின் பலனை வழங்குகிறது. எனவே, சனிக்கிழமை அன்று சப்பாத்தியை கருப்பு நாய்க்கு உணவளிக்கவும். இது கேது-சனியின் எதிர்மறை தாக்கங்களை கட்டுப்படுத்துகிறது, நஷ்டங்களை நிறுத்துகிறது மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது.
புதன்கிழமையில் எறும்புகளுக்கு ரொட்டி மாவு அளிக்கவும்
ராகு குழப்பம், அதீத சிந்தனைகள், மற்றும் தடைகளை உருவாக்குகிறது. புதன்கிழமையில் சப்பாத்தியை மாவாக்கி, சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு உணவளிக்கவும். இது ராகுவின் தாக்கத்தை குறைத்து, மன அழுத்தத்தை நீக்கி, திடீர் அதிர்ஷ்டத்தை வழங்குகிறது, வேலை அல்லது வியாபாரத்தில் தடைகள் நீங்கும்.
வியாழக்கிழமை மீன்களுக்கு ரொட்டி
குரு கிரகம் அறிவு, வளர்ச்சி மற்றும் பெரிய செல்வத்தின் காரகராக உள்ளது. வியாழக்கிழமை அன்று சப்பாத்தி அல்லது ரொட்டியை சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை நதி அல்லது குளத்தில் மீன்களுக்கு உணவளிக்கவும். இது குருவை வலுப்படுத்துகிறது, படிப்பில் வெற்றி, வேலையில் முன்னேற்றம் மற்றும் வியாபாரத்தில் லாபத்தை அளிக்கிறது.
சனிக்கிழமையில் தேவைப்படுபவர்களுக்கு தானமாக அளிக்கவும்
ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடப்பவர்கள், கடுமையான உழைப்புக்கு பலன் கிடைக்க, சனிக்கிழமை ரொட்டிகளை தயாரித்து தானமாக அளிக்கவும்.
ஞாயிற்றுக்கிழமை பசுவுக்கு அளிக்கலாம் அல்லது தானம் செய்யலாம்
சூரியன் செல்வம் மற்றும் ஆற்றலை வழங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை ரொட்டிகளை வெல்லம் சேர்த்து தயாரித்து, மாடுகளுக்கு வழங்கவும் அல்லது இதையே உணவாக யாருக்கேனும் தானம் செய்யலாம். தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் , தொழில் முன்னேற்றம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும்.
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை.
Editorial Staff