கர்ப்பமாக இருக்கிறாரா VJ பிரியங்கா? வைரலாகும் புகைப்படம் கிளப்பிய சந்தேகம்!

VJ பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.


கர்ப்பமாக இருக்கிறாரா VJ பிரியங்கா? வைரலாகும் புகைப்படம் கிளப்பிய சந்தேகம்!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டே, தனது நகைச்சுவை கலந்த பேச்சுத் திறமையால் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளார்.

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர், எப்போதும் ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களை கடந்து வந்த பிரியங்கா, கடந்த ஆண்டு பிரபல டிஜேவான வசியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, பிரியங்கா சென்னை மற்றும் அவரது கணவர் லண்டன் ஆகிய இடங்களில் தங்கள் வேலை காரணமாக வசித்து வருகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் ஒன்றாக இணைந்து நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவர்களின் முதல் திருமண ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக லண்டனில் கணவருடன் சிறப்பாக நேரம் கழித்த புகைப்படங்களையும் பிரியங்கா பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், மதுமிதா மற்றும் பாவனி ரெட்டி இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரியங்கா வெட்கத்துடன் தலைகுனிந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள், “பிரியங்கா கர்ப்பமாக இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து பிரியங்கா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க