இந்திய அணியில் இருக்கும் சிக்கல்.. கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை... இதை கவனச்சீங்களா?
இதற்காக ஆசிய கோப்பை தொடரில் அணியை கட்டமைக்கும் பணியில் தேர்வு குழு தலைவரும் பயிற்சியாளரும் ஈடுபட்டு வருகிறார்கள். டி20 உலக கோப்பைக்கு முன்பு எந்த இடத்தில் எந்த வீரர்கள் களமிறங்கினால் சரிவரும் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றாலும், மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. நடப்பு டி20 உலக கோப்பை சாம்பியன் ஆன இந்திய அணி வரும் 2026 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பையை தற்காத்துக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக ஆசிய கோப்பை தொடரில் அணியை கட்டமைக்கும் பணியில் தேர்வு குழு தலைவரும் பயிற்சியாளரும் ஈடுபட்டு வருகிறார்கள். டி20 உலக கோப்பைக்கு முன்பு எந்த இடத்தில் எந்த வீரர்கள் களமிறங்கினால் சரிவரும் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை என்றாலும் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, கில்லை தவிர மற்ற யாரும் சரியாக விளையாடவில்லை என தெரிய வந்துள்ளது.
கில் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் ஸ்ட்ரக்ரேட்டை தவிர மற்ற வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மோசமான அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் படி திலக் வர்மாவின் ஸ்ட்ரக்ரேட் 126 என்று அளவிலே இருக்கிறது. இதுபோன்று அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஸ்ட்ரைக் ரேட் 124 என்று அளவிலும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் ஸ்ட்ரைக் ரேட் 111.32 என்று அளவிலும் உள்ளது.
இதேபோன்று நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக் ரேட் 111.29 என்ற அளவிலும்,சிவம் துபேவின் ஸ்ட்ரைக் ரேட் 94 என்ற அளவில் உள்ளது. அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதால் இந்திய அணியின் நடுவரிசையில் இருக்கும் சிக்கல் வெளியே தெரிவதில்லை.
ஒருவேளை முக்கியமான ஆட்டங்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால் ஒட்டுமொத்த இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கும் சிக்கலும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஓமன், யுஏஇ போன்ற அணிகளுக்கு எதிராக கூட இந்தியாவில் நடுவரிசை வீரர்கள் சொதப்பி இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.