இந்தியா vs பாகிஸ்தான்: சூப்பர் 4 போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் வரலாற்றுச் சாதனைகள்
போட்டியின் இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில், பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமானை அவர் வீழ்த்தினார். ஜமான் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றிக்கு மத்தியில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மாபெரும் சாதனையைப் படைத்தார்.
போட்டியின் இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில், பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமானை அவர் வீழ்த்தினார். ஜமான் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த ஒரு விக்கெட் மூலம் ஹர்திக் பாண்டியா (12* போட்டிகள், 14 விக்கெட்டுகள்) புவனேஷ்வர் குமாரை (6 போட்டிகள், 13 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி, ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஆனார்.
ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் இலங்கையின் வனிந்து ஹசரங்கா-வுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மூவரும் தலா 14 விக்கெட்டுகளுடன் சமநிலையில் உள்ளனர்.
ஃபக்கர் ஜமானின் விக்கெட், சர்வதேச டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை 97 ஆக உயர்த்தியது. இதன் மூலம், அவர் யுஸ்வேந்திர சாஹலை (96 விக்கெட்டுகள்) முந்தி, சர்வதேச டி20 அரங்கில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் ஓமனுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.