சதத்தில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... உலகின் முதல் வீராங்கனை!
இந்த போட்டியில் சதம் அடித்ததன் பல சாதனைகளை மந்தனா படைத்துள்ளார். இது இந்த ஆண்டு மந்தனாவின் 3-வது சதம் ஆகும்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார்.
அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மந்தனாவின் 3-வது ஒருநாள் சதமாகும்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் பல சாதனைகளை மந்தனா படைத்துள்ளார். இது இந்த ஆண்டு மந்தனாவின் 3-வது சதம் ஆகும். மேலும் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த உலகின் முதல் வீராங்கை என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார். 2024-ம் ஆண்டில் அவர் நான்கு சதங்களையும் அடித்திருந்தார்.
அடுத்ததாக மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். ஸ்மிரிதி மந்தனா 15 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
8 சதங்களுடன் மிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கவுர் 2-வது இடத்தில் உள்ளனர். மேலும் ஆசிய நாடுகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் போட்டியில் 12 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களையும், டி20 போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் மந்தனா உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.