கனடாவில் ஐ.டி ஊழியர் சுட்டுக் கொலை – வெளியான தகவல்... குடும்பத்தினர் வெளியிட்டுள்ள சந்தேகம்

கனடாவில் இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான சந்தன் குமார் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள நெலமங்களா பகுதியை சேர்ந்த தியாமகொண்டலு கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார், கடந்த ஏழு ஆண்டுகளாக கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் சந்தன் குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தன் குமார் கனடாவில் கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்னேற்றும் நோக்கில் ஒரு அமைப்பை தொடங்கி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த அமைப்பை நடத்தி வந்ததே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

“கனடாவிற்கு சென்ற பிறகு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தியாவிற்கு திரும்புமாறு பலமுறை கூறினோம். இப்படியான சம்பவம் நடைபெறும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று சந்தன் குமாரின் தந்தை நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கனடா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர