உலகின் குறைந்தபட்ச சம்பள பட்டியல்: எந்த நாடு எவ்வளவு வழங்குகிறது?

உலக நாடுகளில் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத சம்பள அளவுகள் பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. அதிக அளவில் குறைந்தபட்ச வேதனம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் லக்சம்பர்க் உள்ளது.

உலகின் குறைந்தபட்ச சம்பள பட்டியல்: எந்த நாடு எவ்வளவு வழங்குகிறது?

உலக நாடுகளில் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத சம்பள அளவுகள் பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. அதிக அளவில் குறைந்தபட்ச வேதனம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் லக்சம்பர்க் உள்ளது. அந்நாட்டில் மாதந்தோறும் வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் 2,296 யூரோக்கள்.

இதைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் 2,257 யூரோக்கள், அயர்லாந்தில் 2,034 யூரோக்கள், பெல்ஜியத்தில் 1,959 யூரோக்கள், ஜெர்மனியில் 1,538 யூரோக்கள் மற்றும் ஸ்பெயினில் 1,198 யூரோக்கள் குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதற்கு மாறாக, குறைந்தபட்சமாகவே வேதனம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடாக பல்கேரியா காணப்படுகிறது. அந்நாட்டின் குறைந்தபட்ச மாத சம்பளம் 427 யூரோக்கள் மட்டுமே. அதேசமயம், பிரித்தானியாவின் குறைந்தபட்ச வேதனம் 2,022 யூரோக்கள்.

அடுத்தாண்டு, குறிப்பாக 2026 முதல், பிரான்ஸ் தனது குறைந்தபட்ச சம்பளத்தை 20 யூரோக்களால் உயர்த்த உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிரான்சின் குறைந்தபட்ச மாத வேதனம் சுமார் 1,446 யூரோக்களாக இருக்கும்.