தமிழ் ரசிகர்களின் 'கனவுக்கன்னி'க்கு அடித்த ஜாக்பாட்! பாலிவுட் செல்லும் ருக்மிணி வசந்த்?

2026 ஆம் ஆண்டும் ருக்மிணிக்கு அதிக பிஸியாக இருக்கப் போகிறது. யாஷ் உடன் ‘டாக்ஸிக்’ மற்றும் ‘டிராகன்’ எனும் தெலுங்குப் படங்களில் அவர் நடிக்கிறார். அத்துடன், மணிரத்னம் இயக்கும் அடுத்த தமிழ் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

தமிழ் ரசிகர்களின் 'கனவுக்கன்னி'க்கு அடித்த ஜாக்பாட்! பாலிவுட் செல்லும் ருக்மிணி வசந்த்?

தமிழ் ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக நிற்கும் ருக்மிணி வசந்த், ‘காந்தாரா அத்தியாயம் 1’ படத்தின் மூலம் தேசிய அளவில் உச்சம் தொட்டுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலுடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரிடமிருந்து கேக் ஊட்டப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பாலிவுட்டுக்கு அவர் அடியெடுத்து வைக்கிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

முன்னதாக நேஷனல் க்ரஷ்ஷாக இருந்த ரஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷலுடன் ‘ச்சாவா’ படத்தில் நடித்திருந்த நினைவு புதிய ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. இருப்பினும், இருவரும் படம் நடிக்கப் போவதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அந்த வீடியோ, பிரபல பத்திரிகையாளர் அனுபமா சோப்ரா நடத்திய ‘ஆக்டர்ஸ் ரவுண்ட்டேபிள் 2025’ பேட்டியின் போது எடுக்கப்பட்டது. இதில் விக்கி கௌஷல், கல்யாணி பிரியதர்ஷன், பேசில் ஜோசப், இஷான் கட்டர், கிருத்தி சனோன் உள்ளிட்டோருடன் ருக்மிணியும் பங்கேற்றிருந்தார். அப்போது அவரது சமீபத்திய பிறந்தநாள் கொண்டாடப்பட, விக்கி கௌஷலே கேக் ஊட்டினார்.

2025 ஆம் ஆண்டு ருக்மிணிக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கொண்டுவந்தது. தமிழில் ‘ஏஸ்’, ‘மெட்ராஸி’, கன்னடத்தில் ‘காந்தாரா அத்தியாயம் 1’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆகி, அவரைத் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளன.