இலங்கையில்  11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில்  பல மாவட்டங்களுக்கு இன்றும் (22)  மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில்  பல மாவட்டங்களுக்கு இன்றும் (22)  மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி,  நிலவும் சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாப  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நேற்று முதல் இன்று வரை 24 மணிநேரத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, கண்டி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.