தங்கம் விலை புதிய உச்சம்: அதிரடி உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

Published on: 24 Feb 2026, 10:57 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச பொருளாதார சூழல்களால் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

தங்கம் விலை புதிய உச்சம்: அதிரடி உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச பொருளாதார சூழல்களால் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக ஆர்வம் காட்டி வருவதால், இந்திய சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்து விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ. 1,440 வரை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் அந்த உயர்வு தொடர்கிறது.

இன்றைய நிலவரப்படி (24.02.2026), சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,19,120 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 30 உயர்ந்து ரூ. 14,890 ஆக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 290 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,90,000 க்கும் விற்பனையாகிறது. 

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,16,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ. 1.19 லட்சத்தைக் கடந்துள்ளமை நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW