இத செய்யவே நேரமில்லை… இதுல காதலா? – வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் கடும் பதில்

Published on: 20 Apr 2026, 06:30 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

நடிகை மிருணாள் தாகூர் மீது பரவிய காதல் வதந்திகளை அவர் மறுத்துள்ளார். தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இத செய்யவே நேரமில்லை… இதுல காதலா? – வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் கடும் பதில்

தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் மிருணாள் தாகூர், தன்னைச் சுற்றி பரவி வந்த காதல் மற்றும் திருமண வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.

சமீப காலமாக, அவர் ஒரு பிரபல நடிகருடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறும் என்ற வதந்திகளும் வெளியாகின.

இந்நிலையில், தனது புதிய திரைப்படமான Dacoit புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த வதந்திகளை மறுத்ததுடன் தனது தற்போதைய நிலையை விளக்கினார்.

“எனக்கு தற்போது காதலிக்க நேரமே இல்லை. என் கால்ஷீட் முழுவதும் படப்பிடிப்புகளால் நிரம்பியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை. உண்மையைச் சொன்னால், உடல்நலத்தைக் கவனிக்கவே நேரமில்லாமல் இருக்கிறேன். எனக்கு காலில் லிகமென்ட் கிழிவு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது காதலுக்கு எப்படி நேரம் ஒதுக்குவது?” என அவர் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW