பெற்றோர் மழையில் நனையாமல் தடுக்க குடை கொண்டு சென்ற யுவதிக்கு நடந்த துயரம்

வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது.


பெற்றோர் மழையில் நனையாமல் தடுக்க குடை கொண்டு சென்ற யுவதிக்கு நடந்த துயரம்

வெல்லவாய, ஹந்தபனாகல பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது.

இதனையடுத்து, தாய் மற்றும் தந்தைக்குக் குடையைக் கொடுத்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காகச் சென்ற போது  மின்னல் தாக்கியதில் குறித்த யுவதி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த யுவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். பொலிஸார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க