நள்ளிரவில் சகோதரனால் சகோதரி கொலை; தமிழர் பகுதியை உலுக்கிய பயங்கரம்!

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய  பெண், அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.

அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் பின்தொடர