உறவினர் மற்றும் காதலனால் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது, காதலன் தலைமறைவு

சிலாபம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் உறவினரும் காதலனும் என இரு வேறு நபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உறவினர் மற்றும் காதலனால் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது, காதலன் தலைமறைவு

சிலாபம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் உறவினரும் காதலனும் என இரு வேறு நபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பெற்றோர் சந்தேகமடைந்த நிலையில், அவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக ஒப்படைத்தபோது இந்த தகவல்கள் வெளிப்பட்டன.

ஆரச்சிகட்டுவ பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது 7 மாதங்களுடைய மாணவியே பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சட்ட வைத்திய பரிசோதனைக்கு பின்னர், சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இரண்டு தனித்தனியான சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

2024 ஏப்ரல் 12ஆம் தேதி, நாத்தாண்டிய – வலகாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய உறவினர் ஒருவர் தனது வீட்டில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சிறுமி கூறியுள்ளார். சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியதுடன், பணமும் வழங்கியதாக வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஜூலை 5ஆம் தேதி நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும், திருமணம் செய்வதாக அவர் உறுதியளித்ததால் சம்பவத்தை மறைத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த காலத்தில் சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணியாற்றியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள காதலனை கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி தற்போது தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர