தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது. 

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது. 

அதன் பின்னர் சற்று குறைந்த தங்கம் விலை 27-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து தினமும் புதிய உச்சத்தை தொட்டது.

அந்த வகையில் தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.240-ம், மாலையில் ரூ.480-ம் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.87,600-க்கும், ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163-க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.