தூத்துக்குடியில் கொடூரம்: மது போதையில் வாலிபர் வெட்டிக்கொலை - நண்பர்கள் 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக எட்டயபுரம் அருகே கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கொடூரம்: மது போதையில் வாலிபர் வெட்டிக்கொலை - நண்பர்கள் 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக எட்டயபுரம் அருகே கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கவர்னகிரியைச் சேர்ந்த முனியசாமி, பொன்மாடசாமி மற்றும் மாரிச்செல்வம் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, இருக்கன்குடி கோவில் காதணி விழாவில் பங்கேற்றபோது மது அருந்திய நிலையில் இவர்களுக்கும் பெரியநாயகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் உணவருந்தச் சென்ற இடத்திலும் இந்த மோதல் நீடித்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெரியநாயகம் தனது மினி வேனில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

இதற்கிடையில், கொல்லப்பட்ட பெரியநாயகத்தின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடலைப் பெற மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, உறவினர்கள் உடலைப் பெற்றுச் சென்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர