தடை செய்யப்பட்ட இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்த மனைவி... நெட்டிசன்கள் கடும் கண்டனம்

Published on: 17 Feb 2026, 07:30 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சில பகுதிகளில் முத்தம் போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த பலகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்த மனைவி... நெட்டிசன்கள் கடும் கண்டனம்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற கப்பன் பார்க் காதலர்கள் மற்றும் குடும்பங்கள் அதிகம் கூடும் இடமாக அறியப்படுகிறது. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு பல ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இருப்பினும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சில கட்டுப்பாடுகள் இந்த பூங்காவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுவிடங்களில் அத்துமீறிய அன்பு வெளிப்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் முத்தம் போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த பலகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் செயலில் உள்ள கியாதி ஸ்ரீ என்ற பெண், தனது கணவர் ஷாபாஸ் அன்சாருடன் கப்பன் பார்க் சென்றுள்ளார். அங்கு தடை குறித்த எச்சரிக்கை பலகையை கவனித்த பிறகும், அந்த பலகையின் முன்பே கணவருக்கு முத்தம் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “அந்த எச்சரிக்கை பலகை பல ஆண்டுகளாக அங்கு உள்ளது”, “பொது விதிமுறைகளை மீறுவது தவறு”, “சட்டத்தையும் பொதுமக்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்” போன்ற கருத்துகளை பலர் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இது தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், பொது இடங்களில் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் ஒழுங்கு, பொது நடத்தை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW