கோவையில் கொடூரம்: குடிநீர் கேட்பது போல நடித்து மாற்றுத்திறனாளி இளம்பெண் பலாத்காரம் - ஜவுளிக்கடை ஊழியர் கைது!

சம்பவத்தன்று விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண், தனது தாயாருக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மகேஷ், குடிநீர் கேட்பது போல நடித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
கோவையில் கொடூரம்: குடிநீர் கேட்பது போல நடித்து மாற்றுத்திறனாளி இளம்பெண் பலாத்காரம் - ஜவுளிக்கடை ஊழியர் கைது!

கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை, அதே ஜவுளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த மகேஷ் (32) என்பவர், கோவையில் தங்கி காந்திபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அவரது தாயாரும் அதே கடையில் பணியாற்றி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண், தனது தாயாருக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மகேஷ், குடிநீர் கேட்பது போல நடித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இளம்பெண் தண்ணீர் எடுக்கச் சென்ற சமயத்தில், அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில், மகேஷிடமிருந்து தப்பிக்க அந்த இளம்பெண் போராடியும் பலனளிக்கவில்லை.

வேலை முடிந்து வீடு திரும்பிய தாயாரிடம் பாதிக்கப்பட்ட பெண் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இது குறித்து காட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த மகேஷை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர