60 வயதிலும் முடி ஆரோக்கியமாக இருக்க உதவும் 5 முக்கிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. முடி உதிர்தல், பொடுகு, முடி பலவீனம், வழுக்கை மற்றும் நரை போன்ற பிரச்சனைகள் வயதைக் கடந்து பலரையும் பாதிக்கின்றன.


60 வயதிலும் முடி ஆரோக்கியமாக இருக்க உதவும் 5 முக்கிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. முடி உதிர்தல், பொடுகு, முடி பலவீனம், வழுக்கை மற்றும் நரை போன்ற பிரச்சனைகள் வயதைக் கடந்து பலரையும் பாதிக்கின்றன. குறிப்பாக வயது அதிகரிக்கும் போது முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகிறது. சரியான உணவுகளை உணவில் சேர்த்தால் நீண்ட காலம் முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முட்டை முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம், பயோட்டின் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான வளர்ச்சிக்கு உதவுகிறது. பசலைக் கீரை முடி ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்துக்களை வழங்குகிறது. இதில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலேட் மற்றும் இரும்புச் சத்து உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C நிறைந்த உணவாகும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடியை வலுப்படுத்த உதவுகிறது. தயிர் உணவில் சேர்க்கப்படும்போது முடி வேர்களை உறுதிப்படுத்தி பொடுகு பிரச்சனையை குறைக்கவும் முடியை மென்மையாக்கவும் உதவுகிறது. நெல்லிக்காய் அதிக அளவில் வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி உடைவதைத் தடுக்க உதவுகிறது.

இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் வயது அதிகமான பின்னரும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க