பேயோட்டும் பெயரில் ரூமுக்கு தனியாக அழைத்து 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய பிரபல ஜோதிடர்

Published on: 11 Feb 2026, 07:15 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கேரளாவில் பேயை விரட்டுவதாகக் கூறி 16 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக ஒரு ஜோதிடர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேயோட்டும் பெயரில் ரூமுக்கு தனியாக அழைத்து 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய பிரபல ஜோதிடர்

கேரளாவில் பேயை விரட்டுவதாகக் கூறி 16 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக ஒரு ஜோதிடர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தின் அரீக்கல் பகுதியைச் சேர்ந்த வி.எஸ். முராரி தந்திரி என்ற ராஜன்பாபு என்ற நபர், புதூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மாந்திரிக வழிபாடுகள் மூலம் பில்லி சூனியம் நீக்கப்படலாம், பேய் ஓட்ட முடியும் என்று கூறி சிலர் தொடர்பு கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகளுடன் அவரைச் சந்தித்துள்ளார். அந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தாய் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு ஜோதிடர் பூஜை செய்து பிரச்சினையை தீர்த்து விடுவதாக கூறி, பின்னர் வேறு நாளில் வரும்படி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று காலை சிறுமி மற்றும் அவரது தாய் மீண்டும் ஜோதிடரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சில மணி நேரங்கள் காத்திருந்த பிறகு, பேய் ஓட்டுவதாகக் கூறி சிறுமியை தனியாக உள்ளே அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரம் சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த தாய் உள்ளே சென்று பார்த்தபோது, மகள் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிறுமி தன்னிடம் நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாய் உறவினர்களுக்கு தகவல் அளித்து, ஜோதிடரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டுக்குள்ளான நபர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW