கலப்படப் பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு - பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு!

ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் உள்ள நரசபுரம் கிராமத்தில், கலப்படப் பால் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு முறையான அங்கீகாரமின்றி வரலட்சுமி பால் பண்ணையை நடத்தி வந்த அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் விநியோகித்த பாலில் கலப்படம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் சுமார் 106 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு உயிர்கள் பறிபோயுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாகப் பண்ணை உரிமையாளர் கணேஸ்வர ராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து ஆந்திர சட்டசபையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாலில் உள்நோக்கத்துடன் கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர