டிரம்ப் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை; டிரம்ப் மற்றும் மனைவி எங்கிருந்தனர்?
அமெரிக்காவின் Florida மாநிலத்தில் அமைந்துள்ள Mar-a-Lago இல்லத்துக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் Donald Trump அவர்களின் தனியார் இல்லமான மார்-அ-லாகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு கரோலினாவைச் சேர்ந்த Austin Tucker Martin (21) என்பவர் துப்பாக்கி மற்றும் எரிவாயு கேனுடன் பாதுகாப்பை மீறி வளாகத்துக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
அவரை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதத்தை கீழே போட்டு சரணடையுமாறு எச்சரித்தனர். இந்நிலையில், எரிவாயு கேனை கீழே போட்ட அவர், அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்தபோது, டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி Melania Trump ஆகியோர் White House வளாகத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் எதற்காக மார்-அ-லாகோ வளாகத்துக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
