வெள்ளை ஆடையில் ரசிகர்களை கவரும் ‘ஆடுகளம்’ சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆடுகளம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை டெல்னா டேவிஸ் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார்.

டெல்னா டேவிஸ் முதன்முதலில் விடியும் வரை பேசு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சீரியல் உலகிலும் இவர் தனது திறமையை நிரூபித்து, அன்பே வா, இலக்கியா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். மேலும், மலையாள மொழியிலும் ஒரு தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது டெல்னா டேவிஸ் வெள்ளை நிற ஆடையில் நடத்திய புகைப்பட ஷூட் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவரது அழகும் எளிமையும் கலந்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

