வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்திக்கும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ

Published on: 13 Jan 2026, 06:08 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இந்த சந்திப்பு, ஜனவரி 3, 2026 அன்று அமெரிக்கப் படைகள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பின்னர் நடைபெறவுள்ளது. 

வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்திக்கும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் வெனிசுலா எதிர்க்கட்சியின் முக்கிய தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோவை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் அறிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு, ஜனவரி 3, 2026 அன்று அமெரிக்கப் படைகள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பின்னர் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், மரியா கொரினா மச்சாடோ, மதுரோவின் பதவி நீக்கத்திற்கு டிரம்ப் எடுத்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். மேலும், டிரம்ப் நீண்ட காலமாக விரும்பிய விருதான அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்க முன்வந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW