61 வயதில் மூன்றாவது திருமணத்திற்குத் தயாராகும் அமீர்கான்

பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 61-வது வயதில் மூன்றாவது திருமணத்திற்குத் தயாராகி வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த 47 வயதான கவுரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5-ஆம் தேதி எளிய முறையில் பதிவு திருமணம் செய்துகொள்ள உள்ளார்.


61 வயதில் மூன்றாவது திருமணத்திற்குத் தயாராகும் அமீர்கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் தனது 61-வது வயதில் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ளத் தயாராகி வருகிறார். ஏற்கனவே இரண்டு திருமணங்களைச் செய்திருந்த அவர், மனக்கசப்பு காரணமாக இரண்டு மனைவிகளிடமிருந்தும் விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் அமீர் கான், கவுரி ஸ்ப்ராட் என்பவர் மீது காதல் வயப்பட்டார். இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டதால், இவர்களுக்கிடையேயான உறவு குறித்த கிசுகிசுக்கள் பரவின. தற்போது அந்தச் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கவுரி ஸ்ப்ராட் பெங்களூருவைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 47. லண்டனில் பேஷன் மற்றும் ஸ்டைலிங் படிப்பை முடித்துள்ள அவர், தற்போது மும்பையில் ஒரு சலூனை நடத்தி வருகிறார். மேலும், அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது. வரும் ஜூலை 5-ஆம் தேதி அமீர் கான் தனது காதலியை எளிய முறையில் பதிவு திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்தத் திருமண விழாவில் மிகவும் நெருக்கமான குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர்.

அமீர்கானின் சினிமா நண்பர்களான சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட சில சினிமாப் பிரபலங்களும் திருமண விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க