இலங்கையில் தங்கம் விலை சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

Published on: 04 Jun 2026, 05:31 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்று (ஜூன் 4) இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாய் குறைந்து 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் தங்கம் விலை சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாய் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலகச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கமாக, நேற்று 388,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கப் பவுண்ணின் விலை இன்று 387,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் அளவில், 24 கரட் தங்கத்தின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 44,500 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைச் சரிவு நகை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW