பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Published on: 04 Jun 2026, 05:28 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கேகாலை வத்துரடிகேன பகுதியில், மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று முதலில் பாறையில் மோதி, பின்னர் நேராக ஒரு குடும்பஸ்தரின் மூக்கின் மீது தாக்கியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேகாலை வத்துரடிகேன பகுதியைச் சேர்ந்த 56 வயதான இந்தக் குடும்பஸ்தர், கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் கடந்த 25-ஆம் திகதி நண்பரின் வீட்டிற்குச் சென்று நண்பர்களுடன் இருந்த வேளை, திடீரெனப் பலத்த காற்று வீசியது. இதன்போது, பலா மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று, முதலில் ஒரு பாறையின் மீது மோதி, பின்னர் நேராக அவரது மூக்கின் மீது வந்து விழுந்தது. 

அந்தத் தாக்கத்தினால் அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்ததில், அவரது தலையின் பின்பகுதி ஒரு பாறையின் மீது பலமாக மோதியதால் அவர் படுகாயங்களுக்குள்ளானார். இதையடுத்து, கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW