அணி தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் நீக்கம்! புதிய கேப்டன் இவர்தான்

Published on: 06 Jun 2026, 02:09 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்படுவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2026 டி20 உலகக் கோப்பையை வென்றபோதிலும், சமீப காலத்தில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்மே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அணி தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் நீக்கம்! புதிய கேப்டன் இவர்தான்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முக்கிய காரணமாக அவரது தொடர்ச்சியான மோசமான பேட்டிங் ஃபார்ம் சுட்டிக்காட்டப்படுகிறது.

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றிருந்தாலும், அந்தத் தொடரில் தலைவர் சூர்யகுமாரின் தனிப்பட்ட துடுப்பாட்டம் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சொதப்பி வரும் அவரால், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் பழைய ஃபார்மை மீண்டும் பெற முடியவில்லை.

இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த டி20 அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைவராகவும், திலக் வர்மா துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மோசமான ஆட்டத்தின் காரணமாக, சூர்யகுமார் யாதவ் தலைவர் பொறுப்பில் இருந்து மட்டுமல்லாமல், முழு அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

புதிய இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (தலைவர்), திலக் வர்மா (துணைத் தலைவர்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW