50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்த அறந்தாங்கி நிஷா; ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய மாற்றம்
பட்டிமன்றங்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் புகழ் பெற்ற அறந்தாங்கி நிஷா, Bigg Boss Tamil நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
பிரபல பெண் தொகுப்பாளினி மற்றும் நகைச்சுவை நடிகையான அறந்தாங்கி நிஷா, குறுகிய காலத்தில் உடல் எடையை கணிசமாகக் குறைத்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
50 நாட்களில் 14 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாக, ரசிகர்கள் அவரது இந்த மாற்றத்தை ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர்.
பட்டிமன்றங்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் புகழ் பெற்ற அறந்தாங்கி நிஷா, Bigg Boss Tamil நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து, ஜெயிலர், கோலமாவு கோகிலா 2, திருச்சிற்றம்பலம், ராயன் மற்றும் சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் அடிக்கடி தோன்றிவருகிறார்.
மேலும், “கருப்பு ரோஜா” என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர், சமையல் குறிப்புகள் மற்றும் Vlogs போன்ற பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதே சேனலில், சமீப காலமாக தாம் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றியதன் மூலம் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு குறைவு, துரித உணவுகள், மன அழுத்தம் மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவை உடல் எடையில் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு, நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவுமுறையைத் தேர்வு செய்ததன் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Editorial Staff