ஐரோப்பாவில் இலகுவில் குடியுரிமை பெறக்கூடிய 6 நாடுகள்... உங்களுக்கு தெரியுமா?

இந்த நாடுகளில் குடியுரிமை பெறுவது மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகளாவிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் சலுகைகள், இரட்டை குடியுரிமை போன்ற நன்மைகளைப் பெற முடியும்.

ஐரோப்பாவில் இலகுவில் குடியுரிமை பெறக்கூடிய 6 நாடுகள்... உங்களுக்கு தெரியுமா?

பல ஐரோப்பிய நாடுகள் குடியுரிமைக்கான விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில், சில நாடுகள் முதலீடு, வம்சாவளி அல்லது வதிவிடம் மூலம் வெளிநாட்டினருக்கு எளிதாக குடியுரிமை வழங்குகின்றன. இந்த நாடுகளில் குடியுரிமை பெறுவது மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகளாவிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் சலுகைகள், இரட்டை குடியுரிமை போன்ற நன்மைகளைப் பெற முடியும்.

1. டொமினிகா

டொமினிகா உலகின் மிகவும் மலிவான குடியுரிமைத் திட்டங்களில் ஒன்றை வழங்குகிறது. பொருளாதார பன்முகத்தன்மை அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் சில மாதங்களில் குடியுரிமை கிடைக்கும். வதிவிட உரிமை தேவையில்லை. 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலும், இரட்டை குடியுரிமையும் இதன் சிறப்பம்சங்கள்.

2. அயர்லாந்து

அயர்லாந்தில் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி அயர்லாந்தில் பிறந்திருந்தால், வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை பெறலாம். மொழித் தேர்வு தேவையில்லை. அயர்லாந்து கடவுச்சீட்டு மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படுகிறது.

3. துருக்கி

$400,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட் வாங்குவது அல்லது முதலீடு செய்வதன் மூலம் துருக்கியில் குடியுரிமை பெறலாம். இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படுகிறது. துருக்கிய கடவுச்சீட்டு பல நாடுகளுக்கு விசா-இல்லா அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை வழங்குகிறது.

4. போர்ச்சுகல்

போர்ச்சுகலின் கோல்டன் விசா திட்டம் மிகவும் பிரபலமானது. ஐந்து ஆண்டுகள் நாட்டில் வதிந்த பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்ரம் முடியும். இது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இருப்பதால், குடியுரிமை பெற்றவர்களுக்கு EU நாடுகளில் சுதந்திரமாக வாழவும், பணிபுரியவும் உரிமை உண்டு.

5. வனுவாட்டு

வனுவாட்டுவில் குறைந்த முதலீட்டில் வெறும் இரண்டு மாதங்களில் குடியுரிமை கிடைக்கும். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் மற்றும் வெளிநாட்டு வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படாதது போன்ற சலுகைகள் உள்ளன.

6. இத்தாலி

இத்தாலியில் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை பெற முடியும். இத்தாலிய பெற்றோர் அல்லது மூதாதையர்கள் இத்தாலியில் பிறந்திருந்தால், பிறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள் மூலம் குடியுரிமை பெறலாம். இத்தாலிய குடியுரிமை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்யவும், எத்தனை குடியுரிமைகளையும் வைத்திருக்கவும் உதவுகிறது.