கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள்வதற்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்ட அறிக்கையின்படி, பல்வேறு மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் பயணிகளுக்காக கூடுதல் நீண்ட தூரப் பேருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக பேருந்துகள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தொடருந்து சேவைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ் தொடருந்து இயக்கப்படவுள்ளது என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், நாளை அதிகாலை 5 மணிக்கு, மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு சிறப்பு தொடருந்து இயக்கப்படவுள்ளது. இது பண்டிகை முடிந்து தலைநகருக்குத் திரும்பும் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகளைப் பயன்படுத்தி, பாதுகாப்பாகவும், வசதியாகவும் கொழும்பு திரும்ப அறிவுறுத்தப்படுகிறது.