ChatGPT பேச்சைக் கேட்டு தாயை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த நபர்!

Published on: 12 Dec 2025, 07:47 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ChatGPTக்கு “பாபி” என பெயரிட்டு, அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

ChatGPT பேச்சைக் கேட்டு தாயை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த நபர்!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில், தாய்–மகன் தொடர்பான ஒரு துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் குடும்பம் OpenAI நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

83 வயதான சுசான் ஆடம்ஸ் வீட்டில் கடுமையாக அடித்து கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மகன் ஸ்டீன் எரிக் சோல்பெர்க் (வயது 56) தான் காரணமாக இருந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டினர். 

பின்னர் சோல்பெர்க் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

கொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு சோல்பெர்க் ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து, இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி, ஓபன் ஏஐ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56) முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார். உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். 

ChatGPTக்கு “பாபி” என பெயரிட்டு, அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார்.

 சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

"உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

இதன் விளைவாகவே எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

 தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன என பொலிஸார் கூறினர். .

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து பொலிஸாருடன் சேர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தது.

Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை ஏற்படுத்தும் நிலையாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW