பொண்டி கடற்கரை தாக்குதல்: உயிர்களை காப்பாற்ற முனைந்த ஹீரோவுக்கு $2.1 மில்லியன் நிதி உதவி

அந்த நேரத்தில் அகமது, “நான் இதற்குத் தகுதியானவனா?” என்று உணர்ச்சிபூர்வமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு டெரெனியோவ்ஸ்கி, “ஒவ்வொரு டொலரும் உங்களுக்கே உரியது” என்று பதிலளித்தார்.

பொண்டி கடற்கரை தாக்குதல்: உயிர்களை காப்பாற்ற முனைந்த ஹீரோவுக்கு $2.1 மில்லியன் நிதி உதவி

ஆஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடைபெற்ற தாக்குதலைத் தடுக்க துணிச்சலுடன் முனைந்த அகமது அல்-அகமது என்பவருக்கு, உலகளாவிய ஆதரவின் அடையாளமாக 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க டொலரில் சுமார் 2.1 மில்லியன் ஆகும்.

தாக்குதல் நடந்த நேரத்தில் 43 வயதான அகமது, துப்பாக்கியுடன் இருந்த நபரை தடுக்க முயன்றார். அந்த முயற்சியில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, அவருக்காக உலகம் முழுவதும் இருந்து நிதி திரட்டப்பட்டது.

இந்த நிதி திரட்டலில் 43,000க்கும் அதிகமானோர் பங்களித்துள்ளனர். அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெரும் செல்வந்தர் பில் எக்மனும் ஒருவர். இணையத்தில் பிரபலமான செக்கரி டெரெனியோவ்ஸ்கி, நேரில் அகமதைச் சந்தித்து காசோலையை வழங்கினார்.

அந்த நேரத்தில் அகமது, “நான் இதற்குத் தகுதியானவனா?” என்று உணர்ச்சிபூர்வமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு டெரெனியோவ்ஸ்கி, “ஒவ்வொரு டொலரும் உங்களுக்கே உரியது” என்று பதிலளித்தார்.

பணம் வழங்கிய மக்களுக்கு அவர் சொல்ல விரும்பும் செய்தி குறித்து கேட்டபோது, அகமது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும் என்றும், உயிர்களை காப்பாற்ற வேண்டிய தருணங்களில் தயங்காமல் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.