கூட்டத்தில் நடிகை நிதி அகர்வாலை நசுக்கி எடுத்த ரசிகர்கள்.. பதற வைக்கும் காட்சிகள்!

‘ராஜாசாப்’ திரைப்படம், பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஒரு ஹாரர்–காமெடி படமாகும். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கூட்டத்தில் நடிகை நிதி அகர்வாலை நசுக்கி எடுத்த ரசிகர்கள்.. பதற வைக்கும் காட்சிகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று வெளியாக உள்ள ‘ராஜாசாப்’ திரைப்படத்தின் முதல் பாடல் 'சஹானா சஹானா' வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்ட நிலையில், நடிகை நிதி அகர்வால் மீது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் பாய்ந்து, அவரை தள்ளியும், அநாகரீகமாகத் தொட்டும் தொந்தரவு செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ராஜாசாப்’ திரைப்படம், பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஒரு ஹாரர்–காமெடி படமாகும். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பலானி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம், கோடேகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விழா நடைபெறும்போதே அரங்கில் பெரும் கூட்டம் கூடி சலசலப்பு ஏற்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் வெளியேறிய போது, ரசிகர்களின் திரள் அவரை சூழ்ந்துகொண்டு, அவரது பாதுகாப்பை உறுதிசெய்யும் பாதுகாவலர்களைக்கூட கடந்து அநாகரீகமாக அவரை தள்ளி, தொட்டு நெருங்கியதால், நிதி அகர்வால் கடும் மன உளைச்சலுக்கும், உடல் ரீதியான சிரமத்துக்கும் உள்ளானார்.

அவரது பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டு, அவரை கூட்டத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டு காரில் ஏற்றினர். காரில் அமர்ந்த பிறகு, நிதி அகர்வால் சில நிமிடங்கள் முகத்தை மூடியபடி மன வேதனையில் காட்சியளித்தார். இந்த நேரத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பரவலான கவலை மற்றும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல நெட்டிசன்கள், “ரசிகர்கள் என்ற பெயரில் நடிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், “நடிகர்களுக்கு பொது நிகழ்வுகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க