மார்பகங்களுக்கு கூட நிபந்தனை வைத்தார்கள்… – தென்னிந்திய சினிமாவில் ராதிகா ஆப்தே சந்தித்த அதிர்ச்சி அனுபவம்!

பிரபல பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகை ராதிகா ஆப்தே, சினிமா துறையில் பெண்களின் உடல் தோற்றத்தை மையமாக வைத்து விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகள் குறித்து தனது அதிர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.


மார்பகங்களுக்கு கூட நிபந்தனை வைத்தார்கள்… – தென்னிந்திய சினிமாவில் ராதிகா ஆப்தே சந்தித்த அதிர்ச்சி அனுபவம்!

பிரபல பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகை ராதிகா ஆப்தே, சினிமா துறையில் பெண்களின் உடல் தோற்றத்தை மையமாக வைத்து விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகள் குறித்து தனது அதிர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது ஸ்ட்ரீமிங் தளமான ZEE5-இல் வெளியாகியுள்ள Saali Mohabbat படம் சார்ந்த பேட்டியின் ஒரு பகுதியாக அவர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.

ராதிகா ஆப்தே, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, வெற்றிச்செல்வன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர். தற்போது அழகு என்பதன் சமூக வரையறைகள் மீதான தனது எதிர்ப்பையும், தனிப்பட்ட சங்கடங்களையும் திறந்த மனதுடன் பேசியுள்ளார்.

“சில நேரங்களில் இந்த எதிர்பார்ப்புகள் என்னை மிகவும் பாதிக்கின்றன. குறிப்பாக, உடல் எடை மாற்றங்கள் அல்லது வீக்கம் ஏற்படும்போது, ‘எடையை குறைக்க வேண்டும்’ என மனம் சொல்லும். அதைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு இது என்னை உளவியல் ரீதியாக பாதித்தது. மனநல ஆலோசகரைக் கூட சந்திக்க வேண்டிய நிலை வந்தது,” என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு முக்கியமான பட வாய்ப்பை இழந்த அனுபவத்தையும் அவர் நினைவு கூறினார். “எனக்கு ஒரு பெரிய பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் லண்டனுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். திரும்பி வந்தபோது, 3-4 கிலோ எடை மட்டும் அதிகரித்திருந்தது. ஆனால் அந்த படக்குழு என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக என்னை அந்த படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

அந்தப் படம் பின்னர் பெரும் வெற்றி பெற்று, அதில் நடித்தவர்களின் வாழ்க்கையையே மாற்றியது. இந்த வாய்ப்பை இழந்ததை ஏற்றுக்கொள்ள எனக்கு நிறைய நேரம் ஆனது. ஆனால் பின்னர் அது ஒரு ஆசிர்வாதமாகவே மாறியது. இதுதான் என்னை உறுதியான, தன்னம்பிக்கை கொண்ட நபராக மாற்றியது,” என்றார்.

குறிப்பாக, தென்னிந்திய சினிமாவில் நடித்தபோது சந்தித்த மோசமான சூழல்களையும் அவர் வெளிப்படுத்தினார்:

“நான் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, சில பெரிய புள்ளிகளை சந்தித்தேன். அவர்களின் நடத்தையைப் பார்த்து, ‘இவர்களுடன் பணியாற்ற முடியாது’ என முடிவு செய்தேன். அவர்கள் யார் என்று சொன்னால் நீங்களே அதிர்ந்து போவீர்கள்!

மேலும், ஒரு படத்தில் எனது மார்பகங்களுக்கு கூட நிபந்தனை வைத்தார்கள்! அதாவது, அவை ‘சரியான வடிவத்தில்’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். இது போன்ற அவமதிப்பான சூழல்களை நான் அப்போது பணத்துக்காக ஏற்றுக்கொண்டேன். ஆனால் இன்று, நான் எப்படி இருக்கிறேனோ அதையே ஏற்கும் மனநிலையை அடைந்துவிட்டேன்,” என்று உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.

அதே நேரத்தில், தென்னிந்திய சினிமாவை முழுவதுமாக விமர்சிக்கவில்லை என்றும், “அங்கு நிறைய நல்ல படங்களும், திறமையான கலைஞர்களும் உள்ளனர். ஒவ்வொரு மொழித் திரையுலகமும் தனித்துவமாக சிறக்கிறது,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க