அமெரிக்காவில் இரு இளம் பெண்களுக்கு நேர்ந்த நிலை : எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத கோலம்
கடந்த வாரம் மாலை 4 மணியளவில், மேகனா மற்றும் பாவனா உள்பட 8 பேர், இரண்டு கார்களில் கலிபோர்னியா மாகாணத்திற்கு சுற்றுலா புறப்பட்டனர். மேகனாவும் பாவனாவும் ஒரு காரிலும், மற்ற 6 தோழிகள் மற்றொரு காரிலும் பயணித்தனர்.
அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த இரு தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், சுற்றுலாவில் சென்ற போது ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
25 வயதான புலகண்டம் மேகனா ராணி (மகபூபாபாத் மாவட்டம்) மற்றும் 24 வயதான கடியால பாவனா (முல்கனூர்) ஆகிய இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றனர். படிப்பை முடித்தபின், இருவரும் ஒரே வீட்டில் தங்கி, அமெரிக்காவில் வேலை கிடைக்கும் நம்பிக்கையில் முயற்சித்து வந்தனர்.
கடந்த வாரம் மாலை 4 மணியளவில், மேகனா மற்றும் பாவனா உள்பட 8 பேர், இரண்டு கார்களில் கலிபோர்னியா மாகாணத்திற்கு சுற்றுலா புறப்பட்டனர். மேகனாவும் பாவனாவும் ஒரு காரிலும், மற்ற 6 தோழிகள் மற்றொரு காரிலும் பயணித்தனர். அளபாமா ஹில்ஸ் ரோட்டில் ஒரு வளைவில் காரை திருப்பும் போது, அவர்களது கார் திடீரென மலை ஓரத்திலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
விபத்தில் சிக்கிய மேகனா மற்றும் பாவனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் அவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சோக செய்தி உடனடியாக இரு பெண்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்த பேரிழப்பு, தெலுங்கானா முழுவதும் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் படித்து வேலை பார்க்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய பரிதாப சம்பவங்கள் பெற்றோரின் மனதை உலுக்குகின்றன.
Editorial Staff